Friday, February 3, 2023
HomeEvents-நிகழ்வுகள்சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பொங்கல் விழா

சிறப்பாக இடம்பெற்ற கோப்பாய் ஆசிரியர் கலாசாலை பொங்கல் விழா

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் பொங்கல் விழா நேற்றுத் திங்கட்கிழமை(16.01.2023) காலை-8.30 மணியளவில் ஆசிரியர் கலாசாலையின் நுண்கலை மன்ற ஏற்பாட்டில் மேற்படி கலாசாலை முற்றத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் அதிபர் ச.லலீசன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியரும், யாழ்ப்பாணத் தமிழ்ச் சங்கப் பெருந் தலைவருமானபேராசிரியர் அ. சண்முகதாஸ் மற்றும் பேராசிரியை. மனோன்மணி சண்முகதாஸ் ஆகியோர் பிரதம விருந்தினராகவும், கலாசாலையின் முன்னாள் அதிபர் வீ. கருணலிங்கம் , யாழ்ப்பாணம் தேசிய கல்வியியல் கல்லூரியின் பீடாதிபதி சு.பரமானந்தம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொண்டனர்.

குறித்த விழா நிகழ்வில் பொங்கல் செயற்பாடும் அதற்கான விளக்கங்களும் எனும் பொருளில் முனைவர் மனோன்மணி சண்முகதாஸ் செயன்முறை ரீதியாக ஆசிரிய மாணவர்களுக்கு விளக்க உரை வழங்கினார். நுண்கலை மன்றக் காப்பாளர் ரஜிதா சின்னத்துரை வாழ்த்துரை வழங்கினார்.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular