fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் செய்திகள்

பொள்ளாச்சி விவகாரம் சிபிஐ வசம் ஒப்படைப்பு

தமிழகத்தை உலுக்கி வரும் துயரச்சம்பவம் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடா்பான வழக்கு இன்று காலை சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஆளும் கட்சி, எதிர்க்கட்சிகள் மாறி மாறி குற்றம் சாட்டி வரும் நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என தமிழக அரசு முடிவு செய்துள்ளது. 

பொள்ளாச்சி விவகாரம் சிபிஐ வசம் ஒப்படைப்பு

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் இளம் பெண்கள், பள்ளி, கல்லூரி மாணவிகளை முகநூல் மூலம் தொடா்பு கொண்டு அவர்களை வற்புறுத்தி ஆபாச படங்களை எடுத்து வந்த கும்பல் அண்மையில் கைது செய்யப்பட்டது. இந்த வழக்கில் ஆளும்கட்சிக்கு தொடா்பு உள்ளதாக எதிர்கட்சியும், எதிர்க்கட்சி உறுப்பினா்களுக்கு தொடா்பு உள்ளதாக மாறி மாறி குற்றம் சாட்டி வந்தனா். 

இந்த வழக்கில் தற்போது வரை 8 போ் கைது செய்யப்பட்ட நிலையில் இவா்களுடன் வேறு யாரேனும் தொடர்பில் உள்ளனரா என விசாரணை நடந்து வருகிறது.

வழக்கில் கடுமையான நடவடிக்கை எடுக்கக் கோரியும், குற்றவாளிகள் கடுமையாக தண்டிக்கப்பட வேண்டும் என்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் மர்ம கும்பலால் பாதிக்கப்பட்ட மற்றொரு பெண் தொடர்பான விவரங்கள் தெரியவந்துள்ளது, மேலும் பாதிக்கப்பட்ட பெண் தானாக முன்வந்து புகார் அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

Related posts

சிறையில் உள்ள விக்கிலீக்ஸ் நிறுவனருக்கு தீவிர சிகிச்சை தேவை! மருத்துவர்கள் அவசர கடிதம்

World News

வைரலாகும் இந்த பூனைகள்: என்ன காரணம்?

World News

வடக்கில் இன்றும் மூவருக்கு கொரோனா!

N N