fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பாபி சிம்ஹா அக்னி தேவி பட இயக்குநர் மீது போலீசில் புகார்

பிரபல நடிகரான பாபிசிம்ஹா பல படங்களில் நடித்து இருக்கிறார். இவர்  ஜான் பால்ராஜ் இயக்கியுள்ள அக்னி தேவி படம் வெளியாக தயார் நிலையில் இருக்கும் போது பட இயக்குநர் மீது போலீசில் புகார் கொடுத்து இருக்கிறார்.

பட தயாரிப்பாளரான ஜான்பால்ராஜ் மீது பரங்கிமலை போலீஸ் கமிஷனரான முத்துசாமியிடம் புகார் கொடுத்துள்ளார். அதில் பாபிசிம்ஹா கூறியது. இயக்குநர் ஜான்பால்ராஜ் தயாரித்த அக்னி தேவி படத்தில் 5 நாட்கள் மட்டுமே நடித்தேன். படப்பிடிப்பு போது என்னிடம் சொன்ன கதைப்படி படத்தை எடுக்கமால் வேறு கதையில் படம் எடுக்கப்பட்டதால் அந்த படத்தில் நான் தொடர்ந்து நடிக்கவில்லை.

நடிகர் பாபி சிம்ஹா அக்னி தேவி பட இயக்குநர் மீது போலீசில் புகார்

      அதன் பிறகு நடித்த காட்சிகளை போட்டு காட்ட சொன்னேன் அதற்கு அவர் மறுத்தார் அதனால் அங்கு சில பிரச்சனைகள் வந்தது. அந்த பிரச்சனைக்கு பிறகு படத்தில் இருந்து விலகினேன். விலகுன பிறகும் அதில் நான் நடித்து இருப்பதாக விளம்பரம் செய்து எனக்கு பதிலாக ‘டூப்’ போட்டும், ‘கிராபிக்ஸ் செய்தும் படத்தை முடித்து இருக்கிறார். எனவே டைரக்டர் ஜான்பால்ராஜ் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பிரிவின் கீழ் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

குடும்பத்தினருடன் 50வது பிறந்தநாளைக் கொண்டாடிய ரம்யா கிருஷ்ணன், ரசிகர்கள் வாழ்த்துமழை..!!

TamilTwin India

விஷால் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

N N

தளபதி 65 படத்தின் வாய்ப்பை இழந்த இயக்குனர்

TamilTwin India