fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழ். உரும்பிராயில் இராணுவத்தை தாக்கிய மூவர் பொலிஸாரிடம் ஒப்படைப்பு

யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் இராணுவத்தினரைத் தாக்கிய குற்றச்சாட்டில் மூவரை இராணுவத்தினர் பிடித்து கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

மேற்படி சம்பவம் நேற்றுச்சனிக்கிழமை(23) மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த பகுதியில் காவலரணில் நின்ற இராணுவத்தினர் மீதே தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மூவரும் முச்சக்கரவண்டியில் வந்தவர்கள் எனவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் கோப்பாய், அனலைதீவு மற்றும் சங்கானைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

மூவர் மீதும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

Related posts

கரோனாவால் வீழ்ந்தது விமானக் கட்டணங்கள்

World News

வவுனியாவில் சிறுமி திடீர் மரணம்: இரத்தமாதிரி கொரோனா பரிசோதனைக்கு அனுப்பிவைப்பு

World News

146 பேருக்கு கெரோனா தொற்று பரிசோதனை – யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

World News