fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
ஏப்ரல் 19-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது
இந்தியச் செய்திகள்

ஏப்ரல் 19-ம் தேதி பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியாகிறது

பிளஸ்-2 பொதுத்தேர்வு தமிழகம் மற்றும் புதுவையில் மார்ச் 1-ம் தேதி தொடங்கி வந்த நிலையில் அதற்கான முடிவுகள் வெளியிடப்பட உள்ளது. தமிழக கல்வித் துறை சமச்சீர் பாடத் திட்டத்தின் படி தேர்வுகளை நடத்தியது.

     தமிழகம் மற்றும் புதுவையில் பிளஸ்-2 தேர்வை 8 லட்சத்து 87 ஆயிரத்து 992 மாணவ- மாணவிகள் 2941 மையங்களில் வைத்து எழுதினார்கள். தேர்வை பற்றி மாணவ மாணவிகளிடம் விசாரித்த பொழுது கேள்வி தாள்கள் எளிதாக இருந்தது என்றும் அதிலும் கணிதம், வணிகவியல், வேதியியல், விலங்கியல் ஆகிய பாடங்கள் எளிதாக இருந்தது என்று கூறியுள்ளார்கள். தேர்வு நேற்று முடிவடைந்து உள்ளது.

     விடைத்தாள் திருத்தும் பணி மார்ச் 30-ம் தேதி தொடங்க இருக்கிறது. இந்த பணி ஏப்ரல் 11-ம் தேதி முடியும் என கூறப்படுகிறது. அதற்கு பிறகு பொதுத் தேர்வுக்கான முடிவுகள் ஏப்ரல் 19 வெளியிட இருக்கிறது என சொல்லப்பட்டு வருகிறது.

Related posts

சந்திரயான்2 ஆர்பிட்டர் எடுத்த புதிய புகைப்படங்கள் – இஸ்ரோ வெளியிட்டது

World News

லொறி மீது பேருந்து மோதியதில் பலர் பரிதாபமாக உயிரிழப்பு!

World News

சீன ஜனாதிபதி வருகை: சுற்றுலாப் பயணிகள் அவதி: உள்ளூர் கடைக்காரர்கள் பாதிப்பு! பளபளக்கும் மாமல்லபுரம்

World News