fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள் முக்கிய செய்திகள்

யாழில் திடீரென வீதியில் விழுந்து இறந்த நபர்

யாழ். தென்மராட்சி கொடிகாமம் மத்திப் பகுதியில் இன்று வியாழக்கிழமை (03) காலை நபர் ஒருவர் வீதியில் வெள்ளத்தில் வீழ்ந்து கிடந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது,

இன்று காலை-08 மணியளவில் கொடிகாமம் பொலிஸார் வீதியால் சென்ற போது நபர் ஒருவர் மயக்கமடைந்த நிலையில் நீரில் கிடந்துள்ளார். உடனடியாக அவரை மீட்ட பொலிஸார் நாவலடி வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.

இந்நிலையில் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக அவர் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மேற்படி சம்பவத்தில் தவசிக்குளம் கொடிகாமம் பகுதியைச் சேர்ந்த மகாலிங்கம் மகேஷ் (வயது-28) என்வரே உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கன்னியாகுமரியில் பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பியோடிய மர்மக்கும்பல்

World News

ஏழாலையில் மாபெரும் இரத்ததான முகாம் பிற்போடப்பட்டது!

N N

சாதாரணதரப் பரீட்சை: அனுமதிப் பத்திரங்கள் அடுத்தமாதம் விநியோகம்!

TamilTwin