fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

யாழில் வாகன விபத்தில் உயிரிழந்த குடும்பஸ்தர்!!

யாழ்ப்பாணம்- கோப்பாய் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று(16) காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் கருனாரட்ணம் கருனானந்தன்(வயது-36) என்பவரே உயிரிழந்துள்ளார்.

கோப்பாய் சந்தியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதில் இன்று காலை இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த மோட்டார் சைக்கிளில் பயணித்த சாரதி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.

தற்போது உயிரிழந்தவரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த விபத்து சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

இராமேஸ்வரம் பாம்பனில் புதிய ரயில் பாலம் அமைக்கும் பணி தொடக்கம்

TamilTwin India

யாழ். குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் இன்று வாணி விழா (Photos)

TamilTwin

கிளிநொச்சி பீட பகிடிவதை குறித்து அறிக்கை கோருகிறது மனித உரிமைகள் ஆணைக்குழு

World News