fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
உலகச் செய்திகள் செய்திகள் பிரான்ஸ் புலம்

படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கு பல்லின மக்களும் அஞ்சலி

பிரான்சையும் கடந்து ஈழத்தமிழர்கள் அனைவரையும் அதிர்ச்சியிலும், கவலையிலும் ஆழ்த்திய யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை சேர்ந்த குடும்பத்தவர் ஐவர் படுகொலைக்கு, உணர்வுபூர்வமாக பல்லின மக்களும் தமது அஞ்சலியை செலுத்தியுள்ளனர்.

கடந்த சில தினங்களின் முன்னர் யாழ்ப்பாணம் சண்டிலிப்பாயை சேர்ந்த நிரோஜினி, நிரோஜன், ஜனனி, வீரா மற்றும் கிக்ஷோர் ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தமை புலம்பெயர் தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தி இருந்தது.

இந்த சம்பவமானது புலம்பெயர் தமிழ் மக்களிடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடம்பெற்ற நாளில், குறித்த படுகொலை தொடர்பில் பல்வேறு முரணான தகவல்கள் வெளிவந்திருந்தது.

இந்நிலையில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளுக்கான அஞ்சலி நிகழ்வு நேற்று (வெள்ளிக்கிழமை) பிரான்சில் இடம்பெற்றுள்ளது.

நிகழ்வில் பல்லின மக்களும் பங்கெடுத்திருந்ததோடு, படுகொலை செய்யப்பட்ட பிள்ளைகளை நினைவுகூர்ந்து வரைபடங்கள், ஒளிப்படங்கள் தொங்கவிடப்பட்டதோடு, பூங்கொத்துக்கள், சுடர்கள் ஏற்பட்டிருந்தன.

இதேவேளை இக்கொலைகளுக்கான காரணங்கள் இதுரை கண்டறியப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுவேன்: சஜித் பிரேமதாச காட்டம்!

TamilTwin

வடமராட்சியில் சுற்றிவளைப்பு: வீடு புகுந்து இராணுவத்தினர் தாக்குதல்

World News

கோத்தாவை திடீரென சந்தித்த இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்

World News