Friday, February 3, 2023
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்பார்லே ஜீ பாப்பா குறித்த பல ஆண்டுகால ரகசியத்தைப் போட்டுடைத்த பார்லே ஜீ நிறுவனம்!

பார்லே ஜீ பாப்பா குறித்த பல ஆண்டுகால ரகசியத்தைப் போட்டுடைத்த பார்லே ஜீ நிறுவனம்!

90ஸ் கிட்ஸ்களின் பேவரைட் ஐயிட்டங்களில் ஒன்று பார்லே ஜீ பிஸ்கட். இந்த பிஸ்கட்டின் விலை தற்போது 5 ரூபாய்.

பெரிய பெரிய பிராண்டுகளின் பிஸ்கட்டுகள் சந்தையில் களம் இறங்கிவிட்டாலும் பார்லே ஜீ அதே ருசியில் அதே மலிவு விலையில் பல ஆண்டுகளாக விற்பனை செய்து வருகின்றது.  

பார்லே ஜீ பிஸ்கட் நம் 90ஸ் காலகட்டத்தை ஒருபுறம் மனதின் ஓரத்தின் தட்டிச் செல்லும். பார்லே ஜீ என்றாலே நமக்கெல்லாம் ஞாபகம் வர்றது அந்த பிஸ்கட் கவரின் மேல் உள்ள குழந்தையின் விளம்பரப் புகைப்படம்தான் அப்படிங்கறது மறுக்க முடியாத உண்மை.

பார்லே ஜீ பிஸ்கட் பாக்கெட் மீது உள்ள குழந்தையின் பெயர் நீரு தேஷ் பாண்டே. இவர் நாக்பூரைப் பிறப்பிடமாகக் கொண்டவர் என்றெல்லாம் தகவல்கள் வெளியாகின.

ஆனால் பார்லே ஜீ நிறுவனம் இந்தத் தகவலை மறுத்தத்துடன் பல ஆண்டுகளாக மறைந்திருந்த உண்மையினை வெளிப்படுத்தியுள்ளது.

அதாவது பார்லே ஜீ நிறுவனத்திற்கு விளம்பரங்களைத் தயார் செய்து கொடுக்கும் விளம்பர நிறுவனமான எவரெஸ்ட் நிறுவனம்தான் பார்லே ஜீ புகைப்படத்தினை டிசைன் செய்து கொடுத்துள்ளது.

மேலும் இது எந்தக் குழந்தையின் புகைப்படமும் கிடையாது, இது ஒரு கற்பனை உருவம் என்று பார்லே ஜீ நிறுவனம் கூறி பலருக்கும் அதிர்ச்சியினைக் கொடுத்துள்ளது.

RELATED ARTICLES

Most Popular