fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கன்னட மொழியில் ரீமேக்காகும் பரியேறும் பெருமாள் படம்

பரியேறும் பெருமாள் படத்தில் கதிர், ஆனந்தி இருவரும் நடித்துள்ளார்கள். இப்படமானது திரையுலகில் மாபெரும் வெற்றியைப் பெற்றது. ரசிகர்களின் பேராதரவும், பத்திரிகையாளர்களின் பாராட்டும், திரைப்பட விழாக்களில் விருதுகளும் பெற்ற படமாகும்.

கன்னட மொழியில் ரீமேக்காகும் பரியேறும் பெருமாள் படம்

பரியேறும் பெருமாள் படம் டைரக்டர் ரஞ்சித் தயாரிப்பில், மாரி செல்வராஜ் இயக்கிய படமாகும். இந்தப்படம் தற்போது கன்னட மொழிகளில் தயாராகவிருக்கிறது. இந்தச் செய்தியைக் கேட்ட தமிழ் மற்றும் கன்னடத்தில் முன்னணியில் இருக்கும் ஹீரோக்கள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்க முன் வருகின்றனர். ஆனால், இந்தப் படத்தை இயக்க விருக்கும் காந்தி மணிவாசகம் என்பவர் புதுமுக நடிகர் நடித்தால் தான்  கதைக்கு பொருத்தமாக இருக்கும் என்பதால் பல புதுமுக நடிகர்களை தேடினார். இறுதியாக ஏவிஎம் நிறுவனத்தின் மருமகன் மைத்ரேயா என்ற புதுமுக நடிகரை கதாநாயகனாக தேர்வு செய்துள்ளார். மைத்ரேயாவை படத்தின் கதைக்களமாக விளங்கும் பெங்களூர் பகுதிகளிலும், அங்கு வாழும்  மக்களின் வாழ்க்கையை  பற்றி பழக வைத்தார். நடிகர் மைத்ரேயாவும் அந்த மக்களோடு மக்களாக இணைந்து அவர்ரோடு பழகி அவர்களைப் போல பேச்சு, நடை, உடை  அனைத்தையும்  பழகி  வருகிறார்.  கன்னட பட உலகில் முன்னணியிலுள்ள கதாநாயகி, வில்லன் நடிகர், கதைக்கு உள்ளவாறு  தேர்வு செய்து வருகிறார்கள். விரைவில் இப்படத்தின் துவக்க விழா பெங்களூரில் நடைபெற உள்ளது.

Related posts

உன்னால் தான் இந்த வாழ்கை, விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து கூறிய வரலட்சுமி..!!

TamilTwin India

சசிகுமார் படத்தில் வில்லியாக வித்யா பிரதீப்

N N

குழந்தை எப்போது என்ற கேள்விக்கு சமந்தா பதில்

N N