பால்மா தட்டுப்பாடு மேலும் தொடரும்!

பால்மாவின் விலையை 200 ரூபாவினால் அதிகரிக்கும் கோரிக்கைக்கு அமைச்சரவை எதிர்வரும் வாரம் தீர்வொன்றை வழங்காத பட்சத்தில், பால்மா விநியோகம் வழமைக்கு திரும்ப மேலும் ஒரு மாத காலம் ஏற்படும் என பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் உறுப்பினர் லக்ஷ்மன் வீரசூரிய தெரிவித்துள்ளார்.

அத்துடன், துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பால்மாவை, விரைவில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால், அந்த பால்மா பழுதடையும் எனவும் அவர் கூறுகின்றார்.

நாட்டில் டொலருக்கான தட்டுப்பாடு காணப்படுகின்றமையினால், பல டொன் கணக்கான பால்மா துறைமுகத்தில் தேங்கியுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

இவ்வாறு தேங்கியுள்ள கொள்கலன்களை விடுவிக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் உத்தரவு பிறப்பித்துள்ள போதிலும், கொடுப்பனவுகளை மேற்கொள்வதில் சிக்கல் நிலைமை காணப்படுவதாக அவர் குறிப்பிடுகின்றார்.