fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளுக்கு ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்ப தடை

இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் நடக்க உள்ளது. இதை பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.

     ஐ.பி.எல். கிரிகெட் இன்று சென்னை மைதானத்தில் தொடங்குகிறது. இதில் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிகள் மே 4- ம் தேதி வரை நடை பெறுகிறது. இந்த லீக் போட்டிகளை உலகில் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

பாகிஸ்தான் தொலைக்காட்சிகளுக்கு ஐ.பி.எல். போட்டிகளை ஒளிபரப்ப தடை

     இந்நிலையில் ஐ.பி.எல். போட்டிகளை  பாகிஸ்தான் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப கூடாது என்று அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஏனெனில் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் அணி வீரர்கள் விளையாடிய போட்டிகளை இந்தியாவின் பிரபலம் ஒளிபரப்ப மறுத்துவிட்டதால் பாகிஸ்தான் மறுத்தாக கூறியுள்ளது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் சென்ற வாகனங்களின் மீது  நடத்தப்பட்ட தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.

                இதனால் பாகிஸ்தானுக்கு எதிராக நிலை ஏற்பட்டிருந்த வேளையில் பிப்ரவரி 14 முதல் மார்ச் 17 வரை நடைபெற்ற பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடரை ஒளிபரப்ப செய்ய இந்திய உரிமத்தை பெற்றிருந்த டிஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி அந்த தொடரின் ஒளிபரப்பை தடை செய்திருந்தது என்று கூறப்பட்டுள்ளது.

Related posts

அயோத்தி நில வழக்கில் தீர்ப்பு எதுவாக இருந்தாலும் மக்கள் அமைதி காக்க பல்வேறு மாநில முதல்வர்கள் வேண்டுகோள்

World News

அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்ததில் விபத்தில் சிக்கிய பெண்ணின் இடதுகால் அகற்றம்

World News

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தயார்: கமல்

World News