விஸ்வாசம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு அஜித் நேர்கொண்ட பார்வை என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தி படமான “பிங்க்” படத்தின் ரீமேக் ஆகும். பிங்க் படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தினை தமிழில் சேர்த்து இருக்கிறார் படத்தின் இயக்குநர். இக்கதாபாத்திரத்தில் தான் நடிகை வித்யா பாலன் நடிக்க இருக்கிறார். நேர்கொண்ட பார்வை படத்தினை எச். வினோத் இயக்குகிறார். பிங்க் படத்தில் அமிதாப் பச்சன், டாப்ஸி ஆகியோர் நடித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் உடன் வித்யா பாலன், ஷரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் நடிக்கின்றனர். இப்படத்தில் அஜித் மற்றும் வித்யா பாலன் இருவருக்குமான ஒரு காதல் பாடலினை பாடல் ஆசிரியர் பா. விஜய் எழுதி இருக்கிறார். இப்படத்திற்கு இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். அவர் தற்போது பி. எஸ். மித்ரன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிகின்ற படத்தின் இசை அமைப்பு வேலைக்காக துபாய் சென்று உள்ளதால் அவர் வந்த உடன் அஜித் – வித்யா பாலனின் காதல் பாட்டு படப்பிடிப்பு தொடங்கப்படும்.