fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

எங்கள் நோக்கம் பா.ஜ.க. வை வீழ்த்துவது : ராகுல்

நாகர்கோவிலில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று தமிழகம் வந்துள்ளார். இலங்கை தமிழர் பிரச்சினையை முன்னிலைப்படுத்தி ஏராளமான படங்கள் ட்விட்டரில் பதிவிடப்பட்டு, ராகுலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நிருபர்களை சந்தித்த அவர் “காங்கிரஸ் ஆட்சியில் மதபாகுபாடு இல்லாமல் அனைவரும் சகோதரத்துவமாக வாழ்ந்தனர் என்று குறிப்பிட்டார். ஆனால் பாஜக சகோதரத்துவத்தை குலைத்தது மேலும் தமிழக விவசாயிகளின் போராட்டத்திற்கு சிறிதும் மதிப்பளிக்கவில்லை எனவும் விவசாயிகளுக்கு உரிய அங்கீகாரம் கொடுக்கப்படுவது காங்கிரஸ் ஆட்சியில் தான் என்றார். மேலும் காங்கிரஸ் ஆட்சி அமைத்ததும் விவசாயிகள் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றார் ராகுல். சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பி.,யில் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டார்.

எங்கள் நோக்கம் பா.ஜ.க. வை வீழ்த்துவது : ராகுல்

எங்களுடைய நோக்கம் பா.ஜ.,வை வீழ்த்துவது தான். பிரதமர் வேட்பாளர் யார் என்பது இல்லை. பிரதமர் யார் என்பதை மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இலங்கையில் நடந்த படுகொலைக்கும் காங்கிரசுக்கும் தொடர்பு இல்லை என்பது மக்கள் அறிந்ததே என்றார்.

மேலும் தமிழகத்தை ,தமிழக மக்கள் தான் ஆட்சி செய்ய வேண்டுமே தவிர தமிழகம் டில்லியில் இருந்து ஆட்சி செய்யப்படக்கூடாது என்று ராகுல் கூறினார்.

 ராகுலின் சென்னை வருகையை ஒட்டி டுவிட்டரில் தமிழக அளவில் #GoBackRahul எனும் ஹேஷ்டேக் டிரெண்டானது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

தங்கத்தில் முகக்கவசம்: அசத்திய பணக்காரர்

World News

ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி பலி! பெற்றோர் மீது குற்றச்சாட்டு: தொடரும் பரிதாபம்

World News

பானி புயலுக்கு தமிழகத்திற்கு 309 கோடி ஒதுக்கியது மத்திய அரசு

N N