fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
விக்னேஷ் சிவனின் ஆஸ்கர் கனவு
சினிமா

விக்னேஷ் சிவனின் ஆஸ்கர் கனவு

இயக்குநரும் நடிகை நயந்தாராவின் காதலருமான விக்னேஷ் சிவன் தன்னுடைய கனவினை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அதில் தனக்கு ஆஸ்கர் விருது வாங்க வேண்டும் என்ற கனவு இருப்பதாக தெரிவித்து உள்ளார். 

2019 – ஆம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.  இந்த நிலையில் தான் அவர் தன்னுடைய கனவினைப் பற்றி டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்து உள்ளார்.  ஆஸ்கர் விருது வழங்கும் கதவின் அருகே நின்றபடியே ஒரு படத்தினை அவர் டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் குறிப்பிடும் பொழுது  ‘எனக்கும் ஒருநாள் கதவு திறக்கும், அருகில் இருப்பதே நமது வேலை’ என்று தெரிவித்துள்ளார்.  இதற்கு அவருடைய ரசிகர்கள் விக்னேஷ் சிவனின் கனவு பலிக்க வேண்டும் என வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.  மேலும் அவர்கள் ஆஸ்கர் விருது வாங்குவதற்கு நீங்கள் ஹாலிவுட் படம் இயக்க வேண்டும் என்று அறிவுரையும் வழங்கி உள்ளனர்.  விக்னேஷ் சிவன் ஆஸ்கர் விருது பெற்ற கலைஞர்கள் அனைவருக்கும் தன்னுடைய வாழ்த்தினை தெரிவித்து இருக்கிறார்.  இவர் நானும் ரௌடி தான், போடா போடி , தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

திருமண நாளில் குஷ்பு எடுத்த செல்ஃபி, வைரலாகும் புகைப்படங்கள்!

TamilTwin India

மிரட்டும் ‘மிஸ்கின்’ வெளியானது ‘சைக்கோ’ டிரைலர்

TamilTwin India

‘மைதான்’ திரைப்படத்தின் வெளியீட்டுத் தேதி மாற்றம் அஜய்தேவ்கான் முடிவு..!

TamilTwin India