முகத்தினைப் பளபளன்னு மாற்றச் செய்யும் ஆரஞ்சுத் தோல் ஃபேஸ்பேக்கினை இப்போது எப்படித் தயார் செய்வது என்று பார்க்கலாம்.
தேவையானவை:
ஆரஞ்சு பழத்தோல்- 2 துண்டுகள்
தேங்காய்- 2 துண்டுகள்
செய்முறை:
1. ஆரஞ்சுப் பழத் தோலினை காய வைத்துக் கொள்ளவும்.
2. மேலும் இதனை மிக்சியில் போட்டு நன்கு பொடித்துக் கொள்ளவும்.
3. தேங்காயில் தண்ணீர் தெளித்து அரைத்து பால் பிழிந்து கொள்ளவும்.
4. அடுத்து தேங்காய்ப் பாலில் ஆரஞ்சுத் தோல் சேர்த்து நன்கு கலந்து கொண்டால் ஃபேஸ்பேக் ரெடி.
இந்த ஃபேஸ்பேக்கினை முகத்தில் அப்ளை செய்து 40 நிமிடங்கள் ஊறவைத்து அலசினால் முகம் பளபளக்கும்.