fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

தமிழகத்தில் இனி காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் விடுப்பு!!

விழாக் காலம், வார இறுதி என அனைத்துக் காலகட்டங்களிலும் கட்டாயப் பணி செய்பவர்கள் காவலர்கள். 24*7 என்ற முறையில் எப்போதும் வேலை செய்யும் காவலர்கள் தங்களது குடும்பத்தினருடன் எந்தவொரு பண்டிகையும் கொண்டாடுவதில்லை.

இந்தநிலையில் சில மாதங்களுக்கு முன்னர் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் விடுப்பு அளிப்பது குறித்து அறிக்கை வெளியிட்டார். இது காவலர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றது.

தமிழகத்தில் இனி காவலர்களுக்கு சுழற்சி முறையில் ஒரு நாள் விடுப்பு!!

அதனைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் விடுப்பு அளிப்பது குறித்து தமிழக முதல்வர் சட்டம் ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ், அனைத்து காவல் கண்காணிப்பாளர்கள், மற்றும் காவல் ஆணையர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனைக் கூட்ட முடிவின்படி, காவலர்களுக்கு 6 நாள் வேலை பார்த்தால், ஒரு நாள் விடுப்பு வழங்கவுள்ளதாக  தமிழகக் காவல்துறை திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் பண்டிகைக் காலங்களிலும், சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்படலாம் என்றும் தெரிகிறது. சுழற்சி முறையில் ஒருநாள் விடுப்பு என்பது காவலர்கள் மத்தியில் நிச்சயம் வரவேற்பினைப் பெறும் என்று தெரிகிறது.

Related posts

நிர்பயா வழக்கில் குற்றவாளிகள் தூக்கு தண்டனை : திகார் சிறையில் ஒத்திகை

World News

உடலில் கட்டிய வெடி குண்டுகளுடன் மோடியை மிரட்டும் பாகிஸ்தான் பாடகி

TamilTwin

ஓபிசி மாணவர்களின் மருத்துவப் படிப்புக்கான 50 சதவீத இடஒதுக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் நாளை இறுதி விசாரணை!!

TT Media