Thursday, December 1, 2022
HomeNews and Viewsஇந்தியச் செய்திகள்ஒரே நாடு ஒரே தங்கம்.. கேரளாவில் இனி தங்கத்திற்கு ஒரே விலைதான்!

ஒரே நாடு ஒரே தங்கம்.. கேரளாவில் இனி தங்கத்திற்கு ஒரே விலைதான்!

தங்கத்தின்மீதான மோகம் இன்னும் பெண்கள் மத்தியில் குறையவே இல்லை, ஒருபுறம் மோகம் அதிகமாக அதிகமாக மற்றொருபுறம் விலையும் தாறுமாறாக எகிறவே செய்கின்றது.

தற்போது ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.38,000 க்கு குறையாமல் விற்று வருகின்றது.

செய்கூலி, சேதாரம் என மொத்தமாகக் கணக்குப் பார்த்தால் எப்படியும் ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.41,000 முதல் ரூ.42000 வரை இருக்கும்.

ஒரே நாடு ஒரே தங்கம்.. கேரளாவில் இனி தங்கத்திற்கு ஒரே விலைதான்!

இதில் தங்கத்தின் விலையானது ஒரே மாதிரியாக இல்லாமல் இடத்துக்குத் தகுந்தார்போல் மாறிக் கொண்டே இருக்கும்.

தங்கத்தின் விலையினை தங்கம் மற்றும் வெள்ளி நகை வர்த்தகங்கள் சங்கத்தின் மூலம் ஒவ்வொரு நாளும் நிர்ணயிக்கப்பட்டு வருகின்றது.

இதற்கு மாற்று நடவடிக்கையாக கேரள அரசு ஒரே நாடு ஒரே தங்கம் என்ற கொள்கையினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இனி கேரள மாநிலம் முழுவதிலும் ஒரே மாதிரியான விலையில் தங்கத்தின் மதிப்பு நிர்ணயம் செய்யப்பட உள்ளது.

கேரள அரசின் இந்தத் திட்டம் பொதுமக்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினைப் பெற்றுள்ளது.

RELATED ARTICLES

Most Popular