fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பிரியா வாரியார் மீது ஓமர் லூலு புகார்

                ஒரு அடார் லவ் படத்தின் மூலம் நடித்து பிரபலம் ஆனவர் நடிகை பிரியா வாரியார்.  இவர் அந்த படத்தில் காதல் காட்சியில் கண்ணடித்து நடித்து பிரபலம் ஆனார்.  முதலில் இப்படத்தில் நடிகை பிரியா வாரியார் துணை கதாநாயகியாகத் தான் நடிக்க இருந்தார்.  கண்ணடித்து நடிக்கும் காட்சியில் பிரபலம் ஆனதால் அப்படத்திற்கு முதலில் கதாநாயகியாக நடித்த நூரின் ஷெரிப்பை துணை கதாநாயகியாக மாற்றி விட்டு பிரியா வாரியாரை கதாநாயகியாக நடிக்க வைத்தனர்.  இந்நிலையில் ஒரு அடார் லவ் படத்தின் இயக்குநர் ஓமர் லாலு பிரியா வாரியார் மீது புகார் கூறி இருக்கிறார்.  அவர் அளித்த பேட்டி பின்வருமாறு,

பிரியா வாரியார் மீது ஓமர் லூலு புகார்

      ‘இப்படத்தில் பிரியா வாரியார் கதாநாயகி கிடையாது அவர் கண்ணடித்து பிரபலம் ஆனதால் படத்தின் கதாநாயகி நூரின் ஷெரிப்பை மாற்றி விட்டு பிரியா வாரியாரை கதாநாயகியாக வரும்படி தயாரிப்பாளர் கதையினை மாற்றி எழுத சொன்னார்.  இப்படத்தினால் புகழ் கிடைத்த பின் பிரியா வாரியார் படத்தின் புரமோ‌ஷன் பற்றி கொஞ்சமும் கவலைப்படவில்லை.  இது போல் அவர் இனி வரும் காலங்களில் நடந்து கொள்ளக் கூடாது’ என அவர் கூறி உள்ளார்.

Related posts

தளபதியை புகழ்ந்து தள்ளிய கேரளா எம்.எல்.ஏ

TamilTwin India

டாக்டரை திருமணம் செய்தது உண்மை தான்..!! ஓப்புக்கொண்ட பிரபுதேவா குடும்பம்..!!

TamilTwin India

பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களுக்கு பரிசளித்த இளையராஜா !

TamilTwin India