பராமரிப்புத் தேவைப்படும் நடமாடக் கூடிய முதியோர்கள் சிவபூமி அறக்கட்டளையின் ஆளுகைக்கு உட்பட்ட யாழ்.குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரமத்தில் கட்டணம் இன்றி இலவசமாகத் தங்குவதற்கான வசதிகள் செய்து தரப்படும் எனக் குப்பிழான் சிவபூமி ஞான ஆச்சிரம நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.
மூன்று வேளையும் உணவு வழங்கப்படும். எனவே, சைவ போசன உணவு உண்ணும், தீய பழக்கவழக்கங்கள் அற்றவர்கள் உடனடியாக 0774165816, 0212059391 ஆகிய தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)