Tuesday, September 27, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நுணாவில் IOC இல் இன்று கிராம சேவகர்களுக்குப் பெற்றோல் விநியோகம்

நுணாவில் IOC இல் இன்று கிராம சேவகர்களுக்குப் பெற்றோல் விநியோகம்

யாழ். தென்மராட்சி சாவகச்சேரி நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை(07.08.2022) யாழ்.மாவட்டத்திலுள்ள கிராம சேவகர்களுக்கு QR Code அடிப்படையில் பெற்றோல் விநியோகிக்கப்படவுள்ளது.

இதற்கு அமைய இன்று காலை-9 மணி முதல் பிற்பகல்- 1 மணி வரை கிராம சேவகர்கள் பெற்றோலைப் பெற்றுக் கொள்ள முடியும் என நுணாவில் IOC எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கு அமைய கீழ் குறிப்பிட்ட பிரதேச செயலகப் பிரிவுகள் அடிப்படையில் கிராம சேவகர்களுக்குப் பெற்றோல் விநியோகம் இடம்பெற உள்ளது.

நெடுந்தீவு 09.00.am- 09.30 am வரை,
வேலணை 09.30 am – 10.00 am வரை,
காரைநகர் 10.00 am – 10.30 am வரை,
ஊர்காவற்துறை 10.30 am – 11.00 am வரை,
யாழ்ப்பாணம், நல்லூர் 11.00 am – 11.30 am வரை,
சண்டிலிப்பாய் , சங்கானை, உடுவில் 11.30 am – 12.00 pm வரை,
தெல்லிப்பழை, கோப்பாய், சாவகச்சேரி 12.00 pm – 12.30 pm வரை,
கரவெட்டி, பருத்தித்துறை, மருதங்கேணி 12.30 pm – 01.00 pm வரை

எனும் அடிப்படையில் பெற்றோல் விநியோகம் இடம்பெறவுள்ளது.

இதேவேளை, கிராம அலுவலர்களின் அர்ப்பணிப்பான பணியையும், அவசியத்தையும் கருத்திற் கொண்டு இந்த ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாகவும், கிராம அலுவலர்கள் தம்மை உறுதிப்படுத்தும் ஆவணத்தை இதன்போது தம்வசம் வைத்திருக்க வேண்டும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular