தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்காக வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. தற்சமயம் வேட்புமனு தாக்கல் எண்ணிக்கை 600-ஐ தாண்டி 604 ஆக செய்யப்பட்டு வருகிறது. இதில் வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் 18 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் மாதம் 18-ம் தேதி ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் போன 19-ம் தேதி தொடங்கியது. 17 ஆவது மக்களவைத் தேர்தலையொட்டி தமிழக அரசியல் களம் உச்சகட்ட பரபரப்பை எட்டியுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள் என்பதால் மாநிலம் முழுவதும் திங்கள் கிழமை அதிக அளவில் வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்காக 600 மனுக்களைத் தாண்டி 604 ஆக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது. இதில் 2 திருநங்கைகளின் மனுக்களும் அடங்கியுள்ளது. 18 சட்டசபை இடைத் தேர்தலுக்காக இதுவரை 230 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு உள்ளன.