உக்ரைன் உடனான அமைதி பேச்சுவாரத்தையில் திருப்புமுனைக்கான எந்த அறிகுறியும் இல்லை-ரஷ்யா

உக்ரைனுடனான அமைதிப் பேச்சுவார்த்தையில் திருப்புமுனைக்கான எந்த அறிகுறிகள் எதுவும் இல்லை என ரஷ்யா தெரிவித்துள்ளது.

ரஷ்ய அரசாங்க செய்தித் தொடர்பாளர் Dmitry Peskov கூறியதாவது, இன்னும் நீண்ட காலத்திற்கான பணிகள் இருக்கிறது.

உக்ரைன்-ரஷ்ய இடையேயான அமைதி பேச்சுவார்த்தையில், தற்போது நம்பிக்கைக்குரிய அல்லது திருப்புமுனைக்கான எந்தவித அறிகுறியும் தெரியவில்லை.

எனினும். எழுத்து வடிவத்தில் மோதலை முடிவுக்கு கொண்டு வருவதற்கான அதன் கோரிக்கைகளை உக்ரைன் முன்வைத்துள்ளதை Dmitry Peskov வரவேற்றுள்ளார்.

தயாராக இருங்கள்… நாட்டு மக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை விடுத்த ஜேர்மனி

சமாதானப் பேச்சுக்களுக்கு தலைமை தாங்கும் ரஷ்ய தலைமைப் பேச்சுவார்த்தையாளர் இன்று மேலும் ஒரு புது தகவல்களை வழங்குவார் என்று அவர் கூறினார்.

கீவ் மற்றும் Chernihiv நகரில் தாக்குதல்களை குறைப்பதாக ரஷ்ய கூறியதை அடுத்து, சமீபத்திய பேச்சுவார்த்தை நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

ஆனால் மேற்கத்திய மற்றும் உக்ரேனிய அதிகாரிகள் இதைப் பற்றி சந்தேகம் கொண்டுள்ளனர்.