அரசு மருத்துவக் கல்லூரி, இன்ஜினியரிங்க் கல்லூரிகளில் சேர ஆர்வம் காட்டும் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் படிக்க விரும்புவதில்லை.
காரணம் அரசுப் பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் கொடுக்கும் தரமான கல்வி.
தனியார் பள்ளிகளில் திறமைவாய்ந்த ஆசிரியர்கள், சிறப்பான கட்டிட வசதிகள், டிஜிட்டல் சேவைகள் பயன்பாடு, ஆங்கில வழிக் கல்வி, நூலக வசதி, சிறப்பான லேப் வசதி என பல வசதிகளும் இருப்பது முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகின்றது.
இந்தநிலையில் குஜராத் மாநிலத்தில் தற்போது தனியார் பள்ளிகளில் படித்துவந்த மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அதாவது அரசு பள்ளிகளிலும் தனியார் பள்ளிகளுக்கு இணையான சிறப்பான கட்டிட வசதிகள், டிஜிட்டல் சேவைகள் பயன்பாடு, ஆங்கில வழிக் கல்வி, நூலக வசதி, சிறப்பான லேப் வசதி எனப் பல வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.
இதனால் குஜராத் மாநிலத்தில் அதிக அளவிலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
அந்தவகையில் 40,000க்கும் அதிகமான மாணவர்கள் தனியார் பள்ளிகளில் இருந்து அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ளனர்.
மேலும் இந்தக் கல்வியாண்டில் அரசு நடத்தும் துவக்கப் பள்ளிகளில் 65,000 மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.