fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள் செய்திகள்

இந்தியாவிற்கு அளித்த வரிச்சலுகை ரத்து : அமெரிக்கா அதிரடி

அமெரிக்கா இந்தியாவிற்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தான வர்த்தக முன்னுரிமை (வரிச்சலுகை) என்ற அந்தஸ்த்தை ரத்து செய்தது. ஏற்கனவே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இது குறித்து பலமுறை கூறியிருந்தார்.

அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியாவில் பெரும்பாலும் வரி விதிக்கப்படுவதில்லை மற்றும் பெரிய அளவிலான வரிச்சலுகை (வர்த்தக முன்னுரிமை) வழங்கப்படுகிறது.

இந்தியாவிற்கு அளித்த வரிச்சலுகை ரத்து : அமெரிக்கா அதிரடி

இதனிடையே இந்திய வர்த்தகத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது : அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இந்தியாவில்  எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது மற்றும் மருத்துவப் பொருட்கள், பால் பொருட்கள் மீதான வரியை குறைக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கையை இந்திய வர்த்தகத்துறை ஏற்கவில்லை.

இதனிடையே அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்தியா வரிவிதிப்பு விஷயத்தில் அமெரிக்காவை முட்டாள் என்று நினைக்கிறது என்று கூறியிருந்தார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்திய நிலையில் தற்போது துருக்கி போன்ற நாடுகளுக்கு அளித்த வரிச்சலுகையும் ரத்து செய்யப்படும் என்ற செய்தி அமெரிக்க வர்த்தகத் துறையில் இருந்து வெளிவந்திருக்கிறது.

இந்நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் எந்த பாதிப்பும் இருக்காது என்று இந்திய வர்த்தகத்துறை திட்டவட்டமாக அறிவித்துள்ளது

Related posts

தேசிய போதைப் பொருள் தடுப்பு வாரத்தின் இறுதி நாள் இன்று!

TamilTwin

மதுபான சாலைகளை மூடுமாறு மதுவரித் திணைக்களம் அறிவிப்பு!

SL News

விறுவிறுப்பான போட்டியில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது உடுத்துறை செந்தமிழ் அணி (Video, Photos)

TamilTwin