fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை

இலங்கையில் நேற்றைய தினம் கொரோனா தொற்றுக்கு உள்ளான எவரும் அடையாளம் காணப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 815ஆகவே காணப்படுகிறது.

அவர்களில் 2 ஆயிரத்து 391 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளில் இருந்து வெளியேறியுள்ளனர்.

மேலும் தொற்றுக்கு உள்ளான 365 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். அவர்களில் ஒருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேநேரம் இந்ததொற்றுக்கு உள்ளாகியிருக்கலாம் எனும் சந்தேகத்தில் நாடளாவிய ரீதியில் உள்ள வைத்தியசாலைகளில் 48 பேர் சிகிச்சைப் பெற்று வருவதுடன், இந்த தொற்று காரணமாக இலங்கையில் இதுவரையில் 11 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சாவகச்சேரிப் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டது கதிர்காமம் நோக்கிய பாதயாத்திரை!!

TamilTwin

குழந்தையின் அழுகையைத் தடுக்க தாயின் வித்தியாசமான முயற்சி!

World News

தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவர் தர்மலிங்கத்துக்கு பெரும் உருவச் சிலை: யாழ். சுன்னாகத்தில் திறந்து வைப்பு (Video, Photos)

TamilTwin