fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

கமலஹாசன் மகளாக நடித்தது எனது அதிர்ஷ்டம்

                தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்து வரும் இளம் நடிகை நிவேதா தாமஸ்.  இவர் சிறு வயதில் இருந்தே நடித்து வருகிறார்.  நவீன சரஸ்வதி சபதம், பாபநாசம், ஜில்லா உள்ளிட பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.  நிவேதா தாமஸ் தன்னுடைய சினிமா வாழ்க்கை பற்றி கூறியதாவது,

கமலஹாசன் மகளாக நடித்தது எனது அதிர்ஷ்டம் - நிவேதா தாமஸ்

நான் சிறுவயது முதலே சினிமாவில் நடித்து வருகிறேன்.  சிறு வயதிலேயே எனக்கு கலைத்துறையின் மீது ஆர்வம் ஏற்பட்டது.  8 வயதில் ஒரு மலையாளப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனேன்.  அப்படத்திற்கு கேரள அரசிடம் இருந்து விருது கிடைத்தது.  குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனவர்கள் அனைவரும் ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் நீடித்து இருக்க முடியாமல் சினிமாவை விட்டு வெளியேறி விடுவார்கள் அல்லது பட வாய்ப்புகள் இல்லாமல் வெளியேறி விடுவார்கள்.  ஆனால் எனக்கு பட வாய்ப்புகள் வந்தது, தற்போது கதாநாயகியாகவும் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன.  நான் கமலஹாசன் அவர்களின் தீவிர ரசிகை பாபநாசம் படத்தில் கமலஹாசன் மகளாக நடித்தது என்னுடைய அதிர்ஷ்டம் எனக் கூறி இருக்கிறார்.

Related posts

விஜய் ஆண்டனியின் மனசு பெரிய ஹீரோக்களுக்கு வருமா?

TamilTwin India

ஹீரோ பட ட்ரைலரால் ஏமாந்து போன ரசிகர்கள்!!

N N

காஞ்சனா இந்திப் படத்தில் இருந்து ராகவா லாரன்ஸ் விலகல்

N N