fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
என்ஜிகே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
சினிமா

என்ஜிகே படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு

தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகர் சூர்யா. இவர் நேருக்கு நேர் படத்தின் மூலம் சினிமா திரையுலகில் அறிமுகமானர். அதை தொடர்ந்து பல படங்களை நடித்துள்ளார். இப்பொழுது பட தயாரிப்பாளராகவும் மாறிக் கொண்டு வருக்கிறார். தற்சமயம் செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி இருக்கும் என்ஜிகே படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது.

     என்ஜிகே படத்தில் சூர்யா நடிகராகவும் கதாநாயகியாக சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங்கும் நடித்துள்ளார்கள். இந்த படம் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி உள்ளது. இதில் நந்த கோபாலன் குமரன் என்ற பெயரில் சூர்யா நடித்துள்ளார். சாதாரண இளைஞராக இருந்து அரசியல் களத்தில் இறங்கி மாற்றத்தை ஏற்படுத்துவது போல் அவரது கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த படம் அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகி இருக்கிறது.

     இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். எஸ்.ஆர். பிரகாஷ்பாபு, எஸ்.ஆர்.பிரபு தயாரிக்கும் இந்தப் படத்தில் ஜெகபதி பாபு, பாலா சிங், மன்சூர் அலி கான், முரளி சர்மா, சம்பத் ராஜ் பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து உள்ளார்கள். என்ஜிகே படம் வருகிற மே 31- ம் தேதி திரைக்கு வருகிறது என்று படக்குழு அறிவித்துள்ளது.

Related posts

வெளியானது அடுத்த சாட்டை படத்தின் டீசர்!!!

N N

ரசிகர்களை ஈர்க்கும் கவர்ச்சி, ஸ்வயம் சித்தா வெப் சீரிஸ்..!

TamilTwin India

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கும் தனுஷ் அதிகாரபூர்வ அறிவிப்பு

TamilTwin India