fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்

நடிகர் சூர்யா என்ஜிகே படத்தை தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இயக்குநர் சுதா கொங்காரா இயக்கும் சூர்யா 38 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.

     தற்சமயம் கே.வி.ஆனந்த் இயக்கும் காப்பான் படத்தில் சூர்யா நடித்து வருகிறார். செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்துள்ள `என்ஜிகே’ மே 31 ம் தேதி திரையில் வெளியாக இருக்கிறது. அதன் பிறகு இறுதிச்சுற்று பட இயக்குநர் சுதா கொங்காரா இயக்கத்தில் உருவாக இருக்கும் சூர்யா 38 படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படம் சூர்யாவின் 38 வது படமாகும். இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்க இருக்கிறார். இது ஜி.வி.பிரகாஷ்க்கு அவரது இசையில் உருவாகும் 70 வது படமாக உள்ளது.

சூர்யா 38 படத்தின் புதிய அப்டேட்

     சூர்யா 38 படத்தில் பாடலாசிரியர் விவேக் பாடல்களை எழுதுகிறார். இந்த படத்தை சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. படத்தின் இறுதி ஆடியோ வேலைகள் நடந்து வருகிறது என்றும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொங்க உள்ளதாகவும் ஜி.வி.பிரகாஷ் கூறியிருக்கிறார். படம் குறித்த தகவல்கள் மற்றும் நடிகர் நடிகையர் விவரங்கள் விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts

”தர்பார்” முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா

TamilTwin India

ஆன்லைனில் நேரடியாக வெளியாகும் டாம் ஹாங்க்ஸின் ‘க்ரேஹவுண்ட்’

TamilTwin India

40 வது பிறந்தநாளைக் கொண்டாடும் ஷாலினி – தல ரசிகர்கள் வாழ்த்து!!

N N