ஜப்பானில் புதிய கட்டுப்பாடுகள்

டோக்கியோ உட்பட நாட்டின் பெரும்பகுதியில் புதிய கொரோனா கட்டுப்பாடுகளை விதிக்க ஜப்பான் அரசாங்கம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நாளாந்தம் அடையாளம் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிதத்தை அடுத்து இரவு நேர நடவடிக்கையை கட்டுப்படுத்தும் வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவரப்பட்டுள்ளன.

இருப்பினும் என்ன கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டும் என்ற முடிவை எடுப்பதற்கு 13 பிராந்தியங்களுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த புதிய கட்டுப்பாடுகள் வெள்ளிக்கிழமை(21) முதல் அடுத்த மாதம் 13 வரை அமுலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.