fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

தளபதி 63 – ல் இணையும் அடுத்த பிரபலம்

                நடிகர் விஜய் தற்போது தன்னுடைய 63 வது திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  இப்படத்தினை இயக்குநர் அட்லி இயக்குகிறார்.  இதில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார்.  இப்படத்தில் ஏற்கனவே அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருந்த நிலையில் மேலும் ஒரு பிரபலம் தளபதி 63 படத்தில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தளபதி 63 - ல் இணையும் அடுத்த பிரபலம்

பின்னி மில்லில் பிரம்மாண்டமான செட் அமைத்து சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது.  அதைத் தொடர்ந்து விஜயின் அறிமுகப் பாடலும் படமாக்கப்பட்டது.  இப்படத்தில் விவேக், கதிர், யோகி பாபு, ஆனந்த் ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார்கள்.  இப்பொழுது இவர்களுடன் பிரபல நடிகர் சௌந்தர ராஜனும் இணைந்து உள்ளார்.  முக்கிய கதாப்பாத்திரம் ஒன்றில் இவர் நடிக்கிறார்.  சிறிய வேடம் என்றாலும் வலுவான வேடமாக இருக்கும் என சௌந்தராஜன் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.  விஜயுடன் நடிப்பது சிறந்த அனுபவமாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related posts

”பாலா சார் சொன்ன மாதிரியே வாக்கைக் காப்பாத்திட்டார்”

TamilTwin India

சசிகுமாருக்கு ஜோடியாகும் மிருணாளினி ரவி

N N

முட்டுக்கட்டை போட்ட கொரோனா, புலம்பும் அசோக் செல்வன் !

TamilTwin India