fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
Home » தொற்றினால் உயிரிழப்பவர்களின் விபரங்களை வெளியிட புதிய முறை
corvid 19 virus இலங்கைச் செய்திகள் கொரோனா வைரஸ் செய்திகள்

தொற்றினால் உயிரிழப்பவர்களின் விபரங்களை வெளியிட புதிய முறை

நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் விபரங்களை 24 – 48 மணி நேரத்திற்குள் வெளியிடும் புதிய முறையை இன்று(14) முதல் அமுல்ப்படுத்தவுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.

இந்த புதிய பொறிமுறையானது பின்னிணைப்பை அகற்றி, சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்க அதிகாரிகளுக்கு உதவும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஏற்கனவே இருந்த நடைமுறையின்படி, பல நாட்களுக்கு முன்னர் நிகழ்ந்த மரணங்கள் தினசரி எண்ணிக்கையில் வெளியிடப்படும் நிலையில் புதிய முறையில் இது தவிர்க்கப்படும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இன்று முதல், புதிய முறை அறிமுகப்படுத்தப்படும் நிலையில், கடந்த 48 மணி நேரத்தில் நிகழ்ந்த கொரோனா தொடர்பான அனைத்து மரணங்களும் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

Related posts

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் ஜனாதிபதியால் திறந்து வைப்பு

World News

விவசாயிகளைக் கொச்சைப்படுத்திய முன்னாள் அமைச்சருக்கு தக்க பதிலடி

SL News

தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் லட்சம் ரூபாயை எட்டிய கட்டண உயர்வு!

World News