Tuesday, August 16, 2022
HomeNews and Viewsஇலங்கைச் செய்திகள்நீண்டநாட்களின் பின் யாழ்.பல்கலைக்கழகப் புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு(Photo)

நீண்டநாட்களின் பின் யாழ்.பல்கலைக்கழகப் புதிய மாணவர் ஒன்றியம் தெரிவு(Photo)

யாழ்.பல்கலைக்கழகப் புதிய மாணவர் ஒன்றியத் தலைவராக கலைப்பீட மாணவன் அ.விஜயகுமாரும், செயலாளராக விஞ்ஞான பீட மாணவன் ஜெயராம் றாபினும் , பொருளாளராக முகாமைத்துவ பீட மாணவன் சேந்தனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன் ஒவ்வொரு பீடத்தைச் சேர்ந்த மாணவர்களும் நிர்வாக உறுப்பினர்களாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புதிய மாணவர் ஒன்றியத்தைத் தெரிவு செய்வதற்கான பொதுக் கூட்டம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை(04.7.2022) பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதன்போதே புதிய நிர்வாகத் தெரிவு இடம்பெற்றது.

இதேவேளை, நீண்டநாட்களாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகப் புதிய மாணவர் ஒன்றியத் தெரிவு இடம்பெறவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular