பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீளுமா? வீழுமா?: நாளை இணையவழிக் கலந்துரையாடல்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் கொழும்புக் கிளை ஏற்பாட்டில் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீளுமா? வீழுமா? எனும் தலைப்பிலான இணையவழிக் கலந்துரையாடல் நிகழ்வு நாளை புதன்கிழமை(25.5.2022) இரவு-7.30 மணிக்கு நடைபெறும்.

குறித்த கலந்துரையாடல் நிகழ்வில் பேச்சாளராகப் பொருளாதார நிபுணர் அச்சுதன் ஸ்ரீரங்கன் கலந்து கொள்கின்றார்.

இதேவேளை, இந்தக் கலந்துரையாடல் நிகழ்வில் Meeting ID: 914 0179 1736, Passcode: sleconomy ஊடாக ஆர்வலர்கள் இணைந்து கொள்ள முடியும் எனவும் நிகழ்வின் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)