Tuesday, August 16, 2022
HomeEvents-நிகழ்வுகள்புத்தூரில் நாளை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 44 ஆவது ஆண்டு தினப் பொதுக்...

புத்தூரில் நாளை புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் 44 ஆவது ஆண்டு தினப் பொதுக் கூட்டம்

புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி 44 ஆவது ஆண்டில் காலடி வைப்பதை முன்னிட்டுக் கட்சியினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பொதுக் கூட்டம் “நெருக்கடிகளை எதிர்கொள்ள உழைக்கும் மக்களே ஒன்றிணைவீர்” எனும் தொனிப் பொருளில் நாளை ஞாயிற்றுக்கிழமை (03.07.2022) மாலை-5.30 மணிக்கு யாழ்.புத்தூர் மேற்கு கலைமதி மக்கள் மண்டபத்தில் கட்சியின் வட பிராந்தியச் செயலாளரும், வலி.கிழக்குப் பிரதேச சபையின் சுயேட்சைக் குழுவின் தலைவருமான கா.செல்வம் கதிர்காமநாதன் தலைமையில் நடைபெறும்.

மேற்படி பொதுக் கூட்டத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் சி.கா. செந்திவேல், கட்சியின் அரசியல் குழு உறுப்பினர்களான சட்டத்தரணி சோ.தேவராஜா மற்றும் எழுத்தாளர் க.தணிகாசலம், கட்சியின் வன்னி மாவட்டங்களின் செயலாளர் என்.பிரதீபன் மற்றும் பொ.முருகேசு, க.சத்தியசீலன் ஆகியோர் கலந்து கொண்டு விசேட உரைகளை நிகழ்த்த உள்ளனர்.

இதேவேளை, மேற்படி புரட்சிகரப் பொதுக் கூட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

(செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular