நடிகர் அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான படம் விஸ்வாசம். இதில் ஜோடியாக நயன்தாரா நடித்து இருந்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. தற்போது இவர் தன்னுடைய 59 – வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் இந்தியில் ரிலீஸான பிங்க் என்ற படத்தின் ரீமேக் ஆகும். இதில் அஜித் உடன் இந்தி நடிகை வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், அபிராமி வெங்கடாச்சலம், அஸ்வின் ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இப்படத்தின் போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி மிகவும் வைரலாக பரவி வருகிறது. இப்படத்தினை மறைந்த நடிகை ஸ்ரீ தேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். இப்படத்திற்கு நேர்கொண்ட பார்வை என பெயர் வைத்து உள்ளனர். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்து இருக்கிறார். படத்தின் வேலைகள் பாதி அளவு முடிவடைந்த நிலையில், மார்ச் மாத இறுதிக்குள் படப்பிடிப்பு முழுவதும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மே மாதம் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.