Tuesday, September 27, 2022
HomeUncategorisedஇறந்ததாகக் கருதிஅடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் எழுந்து வந்ததால் அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர்!

இறந்ததாகக் கருதிஅடக்கம் செய்யப்பட்டவர் உயிருடன் எழுந்து வந்ததால் அதிர்ச்சியான அக்கம்பக்கத்தினர்!

செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுவாஞ்சேரி பகுதியில் இறந்ததாகக் கருதி அடக்கம் செய்யப்பட்ட மூதாட்டி ஒருவர் உயிருடன் எழுந்து வந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டத்தின் கூடுவாஞ்சேரியில் உள்ள அம்பேத்கார் நகரில் வசித்து வருபவர் சந்திரா.

செங்கல்பட்டு- தாம்பரம் இடையேயான பகுதியில் இரயில் மோதி சந்திரா இறந்துள்ளார்.

சந்திராவின் உடலை அவரின் மகள் உறுதி செய்ததையடுத்து உடல் அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

அதனையடுத்து சந்திராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்தநிலையில் சந்திரா வீட்டிற்கு வந்ததைக் கண்டு அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

அதன்பின்னர் அடக்கம் செய்யப்பட்ட உடல் சந்திராவின் உடல் கிடையாது என்றும், இறந்தவர் யார் என்பதைக் கண்டறிவதற்கான விசாரணையினைக் கையில் எடுத்துள்ளனர் போலீசார்.

RELATED ARTICLES

Most Popular