யாழ்ப்பாணம் நீராவியடி கடையிற் சுவாமி ஸ்ரீ வாலாம்பிகா சமேத வைத்தியநாதன் ஆலய வருடாந்த அலங்காரத் திருவிழா நாளை மறுதினம் வியாழக்கிழமை(23.6.2022) ஆரம்பமாகவுள்ளது.
தொடர்ந்தும் 10 தினங்கள் இடம்பெறவுள்ள இவ்வாலய அலங்கார உற்சவத்தில் எதிர்வரும்- 3 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை 108 சங்காபிஷேகம், ருது சோபனம், மாலை திருக் கல்யாணம்,திருவூஞ்சல் பாடப் பெற்று எம்பெருமான் அலங்கரிக்கப்பட்ட மஞ்சரதத்தில் திருவீதி வலம் வரும் திருக்காட்சியும் நடைபெறும். எதிர்வரும்-4 ஆம் திகதி திங்கட்கிழமை மாலை-5 மணிக்கு வைரவர் சாந்தியும் இடம்பெறும்.
இதேவேளை, இவ்வாலய 1008 சங்காபிஷேகம் நாளை புதன்கிழமை(22.6.2022) காலை-8 மணிக்கும் நடைபெறும் எனவும் கடையிற் சுவாமிகள் சிவன் அடியார்களும் உபயகார அன்பர்களும் கேட்டுள்ளனர்.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)