fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – தாடி பாலாஜி

      தாடி பாலாஜி மற்றும் அவருடைய மனைவி நித்யா இருவருக்கும் இடையே உள்ள பிரச்சனையின் தீவிரத்தால் ஒவ்வொரு நாளும் பல்வேறு வகையான புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது.  இந்நிலையில் தாடி பாலாஜி கமிஷ்னர் அலுவலகம் சென்று வெளியே வந்த பொழுது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்து உள்ளார். 

சப் இன்ஸ்பெக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் - தாடி பாலாஜி

      பேட்டியில் அவர் கூறியதாவது, “எனக்கும் என் மனைவி நித்யாவுக்கும் இடையே ஏற்ப்பட்ட பிரச்சனையை குறித்து விசாரிப்பதற்காக உதவி போலீஸ் கமிஷனர் சுப்பிரமணியன் அவர்கள் என்னை விசாரணைக்கு அழைத்தார்.  அதன் பேரில் நான் கமிஷனர் அலுவலகம் வந்தேன்.  என் குடும்ப வாழ்க்கையில் புகுந்து பிரச்சனையினை ஏற்படுத்திய போலீஸ் சப் – இன்ஸ்பெக்டர் மனோஜ் குமார் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளார்.  இன்னொரு குடும்பத்தினை அவர் இவ்வாறு இனி கெடுக்காத அளவிற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.  எனது மனைவியுடன் உள்ள பிரச்சனையை கோர்ட்டில் தீர்த்துக் கொள்வேன் எனது குழந்தைக்கு தேவையான செலவினை பார்த்துக் கொள்வேன் இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.

Related posts

நேர்கொண்ட பார்வை படத்தின் டிரைலர் வெளியீடு

N N

அஜித்துடன் நடிக்க ஜீவா விருப்பம்

N N

தயாராகிறது சந்தானத்தின் ‘பிஸ்கோத்’

TamilTwin India