fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இந்தியச் செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பட வேண்டும்… பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி!!

கொரோனா ஊரடங்கு தளர்த்தப்பட்டதும் உடனடியாக நீட் தேர்வானது தாமதிக்காமல் நடத்தப்பட்டது. இந்தியா முழுவதும் ஏறக்குறைய சுமார் 15 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் நீட் தேர்வை எழுத முடியாமல் போனதையடுத்து அந்த மாணவர்களுக்கான மறு தேர்வானது அக்டோபர் 14 ஆம் தேதி தேர்வு நடத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து நேற்று மாலை 4 மணிக்கு நீட் தேர்வு முடிவு வெளியானது.

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்கள் அதிகரிப்பட வேண்டும்… பாஜக தலைவர் எல். முருகன் பேட்டி!!

நீட் தேர்வு முடிவுகள் குறித்து எதிர்க்கட்சித் தலைவர்கள் விமர்சித்து வரும் நிலையில் பாஜக தலைவர் எல். முருகன் அரசாங்கத்தால் நடத்தப்படும் இலவசப் பயிற்சி மையங்கள் தமிழகத்தில் அதிகரிப்பட வேண்டும் என்று கருத்து தெரிவித்துள்ளார்.

அதாவது பா.ஜ.கவின். தலைமை அலுவலத்தில், பிரதமர் மோடியின் திட்டங்களை வெளிப்படுத்தும் வகையிலான கொலு பொம்மைகளை திறந்து வைத்த அவர், “தமழ்நாட்டில் நீட் பயிற்சி மையங்களை அதிகரித்து மாணவர்களுக்கு சிறப்பான பயிற்சியானது அளிக்கப்பட வேண்டும்.

மேலும் மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 7.5 சதவீத இடஒதுக்கீட்டை பெறுவது குறித்து தீர்க்கமான முடிவுகள் எடுக்க வேண்டும்.

நீட் தேர்வில் தமிழகத்தினைப் பொறுத்தவரையில் 99,610 பேரில் 57,215 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 

Related posts

தமிழகத்தில் 10 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு

N N

சென்னையில் வினோதம்: மணமக்களுக்கு பரிசாக குடிநீர்!! (Photos)

TamilTwin

தமிழக அரசே சுஜீத் மரணத்திற்கு காரணம்: மீரா மிதுனின் வைரல் வீடியோ

TamilTwin India