fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
அழகு

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்துப் பயிற்சி

அதிக நேரம் அமர்ந்தே வேலை செய்பவர்களுக்கு உண்டாகும் கழுத்து, முதுகெலும்பு, இடுப்பு போன்ற வலிகளுக்கான பயிற்சிகளைப் பார்க்கலாம்.

     நிமிர்ந்த நிலையில் நாற்காலியில் அமர வேண்டும். வலது கையை வலது கன்னத்தில் பதித்து, இடது பக்கம் மெதுவாகத் திருப்பி, சில விநாடிகளில் பழைய நிலைக்குத் திரும்ப வேண்டும். இதுபோல இடது பக்கத்துக்கும் என தலா மூன்று முறை செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் இது மூளையைப் புத்துணர்வு பெறவைக்கும். தூக்கக் கலக்கத்தில் இருப்பவர்களுக்கு, உற்சாகமாக வேலை செய்ய இது உதவும்.

உட்கார்ந்தே வேலை செய்பவர்களுக்கான கழுத்துப் பயிற்சி

     இரு கைகளையும் கோர்த்து, கட்டை விரல்களை தாடையின் அடியில் வைத்து, கழுத்தை மெதுவாக மேலே தூக்கி, பழைய நிலைக்கு வர வேண்டும். இதேபோல, கைகளை தலைக்குப்பின் கோர்த்து, கழுத்தை மென்மையாகக் கீழே அழுத்த வேண்டும். இப்படி, மூன்று முறை செய்ய வேண்டும். நாற்காலியில் நேராக அமர்ந்தபடி, தலையை இடது தோள்பட்டையின் பக்கமாக, காது தோள்பட்டையில் படும்படி சாய்க்க வேண்டும். பின், வலது தோள்பட்டையின் பக்கம் சாய்க்க வேண்டும். இதேபோல், தலையை மேலே உயர்த்தியும் கீழே குனிந்து தரையைப் பார்த்தபடியும் செய்ய வேண்டும். இதை செய்தால் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லும். கழுத்துப் பகுதி வலிமை பெறுவதுடன், அந்தப் பகுதியில் இறுக்கம் குறையும்.

Related posts

சருமத்தில் ஈரப் பசைத் தன்மையினை அதிகரிக்க கற்றாழை ஜெல்!!

N N

முக அழகினைக் கூட்டும் உருளைக் கிழங்கு மாஸ்க்!!

N N

அடர் கருப்பான முடி வேண்டுமா? இந்த ஹேர்டையை யூஸ் பண்ணிப் பாருங்க!!

N N