fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

ரசிகர்களுக்கு சர்பரைஸ் கொடுக்கும் நயன்தாரா

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா, தற்போது சர்ஜுன் இயக்கிய ஐரா என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படமானது வருகிற 28-ம் தேதி வெளியாக உள்ளது.  இயக்குநர் சர்ஜுன் சத்யராஜ் நடிப்பில் வெளியான “எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்” படத்தின் மூலம் அறிமுகமானவர். சர்ஜுனின் இரண்டாவது படம் ஐரா. நயன்தாரா இப்படத்தில் இரு கேரக்டரில் அதாவது, பவானி மற்றும் யமுனா என்னும் கேரக்டர்களில் நடித்துள்ளார். முக்கியமான கதாபாத்திரத்தில் கலையரசன் நடிக்கிறார். 29 ஆம் தேதி விஜய் சேதுபதி நடிக்கும் சூப்பர் டீலக்ஸ் படம் வெளியாக உள்ளது. அதற்கு முந்தைய நாள் ஐரா படம் வெளியாகவுள்ளது. சுந்தரமூர்த்தி கே.எஸ் படத்திற்கு இசையமைத்திருக்கிறார்.

ரசிகர்களுக்கு விருந்து கொடுக்கும் நயன்தாரா

    பெரிய ஹீரோக்களின் படங்களை மட்டுமே அதிகாலை 5 மணிக்கு திரையிடுவார்கள். சிறிய படங்கள், சிறிய நடிகர்கள் படங்களுக்கு அதிகாலை 5 மணி காட்சி திரையிடுவதில்லை. ஆனால், தற்போது வெளியான ‘எல்.கே.ஜி’ படம் காலை 5 மணி காட்சி திரையிடப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஐரா படத்தின் அதிகாலை 5 மணி காட்சி மூலம் தனது ரசிகர்களை நயன்தாரா காண வருவதாகக் கூறப்படுகிறது. இது உண்மையெனில் ரசிகர்களுக்கு கிடைத்த சிறந்த விருந்துதான்.

Related posts

சாந்தனு போலவே இருக்கும் நபர், ரசிகர் வெளியிட்ட வீடீயோவை பார்த்து ஷாக்கான கிகி, சாந்தனு !

TamilTwin India

வழக்கு தொடர முடிவு செய்த சின்மயி !

TamilTwin India

கவர்ச்சி கன்னி மீரா மிதுனின் வைரலாகும் வீடியோ !

TamilTwin India