fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா

கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை இயக்கவிருக்கிறார் மணிரத்னம். அதற்கான வேலைகள் தற்போது மும்முரமாக நடந்து வருகிறது. இந்தப் படத்துக்கு நடிகர் நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது. கடந்த முறை விஜய், மகேஷ் பாபு என பெரிய நட்சத்திரங்களை வைத்துப் படமாக்க முயற்சித்தார் மணிரத்னம். ஆனால், அது கைகூடவில்லை.

      தற்போது, விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட் நட்சத்திரங்களையும் வைத்து இம்முறை ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இயக்கப் போகிறார் மணிரத்னம். இதில், யாருக்கு என்னென்ன கதாபாத்திரங்கள் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, அருள்மொழி வர்மனாக ஜெயம் ரவி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், சுந்தர சோழராக அமிதாப் பச்சன், வல்லவராயன் வந்தியத்தேவனாக கார்த்தி ஆகியோர் நடிக்கின்றனர்.

பொன்னியின் செல்வன் படத்தில் நயன்தாரா

     பெரிய பழுவேட்டரையராக பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு, நந்தினியாக ஐஸ்வர்யா ராய், குந்தவை நாச்சியாராக கீர்த்தி சுரேஷ் ஆகியோரும் நடிக்கின்றனர். இந்த நிலையில், ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் மணிரத்னம். வந்தியத்தேவனை இலங்கைக்கு அழைத்து சென்று அருள்மொழி வர்மனை காப்பாற்றி தமிழகம் அழைத்து வரும் முக்கிய கதாபாத்திரமான பூங்குழலியாக நடிக்க நயன்தாராவுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

Related posts

தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்ட 25 வயது இளம் நடிகை, பாலிவுட்டில் பரபரப்பு !

TamilTwin India

நன்றி தெரிவித்த விக்ராந்த்!!

N N

“நடிகர் கவுண்டமணியை சந்தித்ததில் மகிழ்ச்சி” இந்திய கிரிக்கெட் வீரர் பத்ரி !

TamilTwin India