fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
இலங்கைச் செய்திகள் செய்திகள்

தேசிய மர நடுகை திட்டம் ஜனாதிபதியின் தலைமையில் ஆரம்பம்(Photos)

இரண்டு மில்லியன் மரக்கன்றுகளை நடும் ”ஹுஸ்ம தென துரு“ தேசிய மர நடுகை திட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ தலைமையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நாட்டின் வனப்பகுதியை நூற்றுக்கு 30% ஆக அதிகரிப்பதற்காக சுற்றாடல் அமைச்சினால் இந்த நிகழ்ச்சி திட்டமிடப்பட்டுள்ளது.

வளிமண்டலத்தில் கார்பனீரொட்சைட்டின் அளவைக் குறைத்து, ஒட்சிசனின் அளவை அதிகரிக்கும் நோக்கத்துடன், அந்த அந்த பிரதேசங்களுக்குப் பொருத்தமான மரங்கள் நட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அத்தோடு, அடுத்த ஐந்து ஆண்டுகளில் 02 மில்லியன் மரக் கன்றுகளை நடுவதற்குச் சுற்றாடல் அமைச்சு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதியினால் நேற்று பத்தரமுல்லையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கு முன்னால் உள்ள பாதுகாப்பு தலைமையகத்தின் நுழைவாயிலுக்கு அருகில் முதல் கன்று நடப்பட்டது.

மேலும், நாடு முழுவதும் மரக்கன்றுகளை விநியோகிப்பதை ஆரம்பித்து வைக்கும் வகையில் பாடசாலை மாணவர்களுக்கு மரக்கன்றுகள் விநியோகிக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

யாழ். உண்ணாவிரதப் போராட்டத்துக்கு வலுச் சேர்த்துள்ள யாழ். பல்கலை மாணவர்கள் (Video, Photos)

TamilTwin

யாழ். சாவகச்சேரி நகர வர்த்தகர்கள் எடுத்துள்ள முன்மாதிரியான முடிவு: சமூக ஆர்வலர்கள் பாராட்டு

TamilTwin

ஜனாதிபதியுடன் எண்மர் அடங்­கிய குழு இந்­தியா செல்லும்

World News