மாவீரர் வாரத்தின் இறுதிநாள் இன்று ஞாயிற்றுக்கிழமை(27.11.2022) ஆகும்.இதனை முன்னிட்டுத் தமிழ்த்தேசியப் பண்பாட்டுப் பேரவையினரால் யாழ்.மாநகரம் முழுவதும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
மாவீரரின் வீரத்தைப் பறைசாற்றும் படம், தமிழீழத்தைக் குறிக்கும் படம், கார்த்திகைப் பூவின் படம் ஆகியவற்றுடன் கூடியதாக கொண்ட இலட்சியம் குன்றிடா எங்கள் வீரமறவர்களின் மாவீரரர் நாள் என்ற வாசகம் பொறிக்கப்பட்டதாக குறித்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் இவ்வாறு ஒட்டப்பட்டுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.


(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)