fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சின்னத்திரை என்பது எனக்குப் புதிது நடிகை நதியா

1984 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நதியா. அதை தொடர்ந்து 1985 ஆம் ஆண்டு பூவே பூச்சுடவா படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்குள் வந்தார். நதியா தமிழ் சினிமாவில் 100 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். அதே போல் மலையாளத்திலும் தடம் பதித்தார். திருமணத்திற்கு பின் சினிமாவில் இருந்து ஒதுங்கிய நதியா, சினிமாவில் தன்னை தேடி வரும் கதாபாத்திரத்தில் நடித்தார். அப்போது தான் எம்.குமரன், பட்டாளம் உள்ளிட்டப் படங்களில் நடித்துள்ளார். தற்போது மீண்டும் தமிழில் நடிப்பதற்கு திரும்பியிருக்கிறார்.

சின்னத்திரை என்பது எனக்குப் புதிது நடிகை நதியா

சின்னத்திரை மூலம் நடிக்க வருகிறார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் ரோஜா மெகா தொடரில் ஒரு கதாபாத்திரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசும்போது சின்னத்திரை என்பது எனக்கு புதிது தான். இதற்கு முன் பல வாய்ப்புகள் வந்தும் நான் எதையும் ஏற்கவில்லை. இதில் சிறப்பான தோற்றத்தில் நடிக்கிறேன். ரசிகர்களை அவர்களுடைய இல்லங்களுக்கு சென்று சந்திப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். சினிமாவில் நடிப்பது பற்றி இன்னும் எந்த முடிவும் எடுக்கவில்லை. மனதுக்கு பிடித்த கதாபாத்திரம் வந்தால் பார்க்கலாம் என்று கூறினார் நதியா.

Related posts

பாலிவுட் நடிகைக்கு முத்தம் கொடுக்க முயன்ற ரசிகர், வைரல் வீடியோ

TamilTwin India

பாலியல் துன்புறுத்தல் வழக்கு பதிவு செய்திருக்கும் நவாசுதின் சகோதரர் மகள் !

TamilTwin India

தமிழ் சமூகத்திற்கே தலைகுணிவு, கடும் கண்டனம் தெரிவித்த நடிகர் கார்த்தி!

TamilTwin India