Tuesday, September 27, 2022
HomeUncategorisedநல்லூரில் நடு வீதியில் விஷமிகள் செய்த மோசமான செயல்!(Photos)

நல்லூரில் நடு வீதியில் விஷமிகள் செய்த மோசமான செயல்!(Photos)

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலயத்தின் பின் பகுதியில் ஆலயத்திற்கு மிகச் சமீபமாக யாழ்.பருத்தித்துறை வீதியில் விஷமிகள் சாராயப் போத்தலை உடைத்து வீசியுள்ளனர்.

குறித்த சம்பவம் நேற்றுச் செவ்வாய்க்கிழமை(20.9.2022) இரவு இடம்பெற்றுள்ளது.

யாழ்.மாநகரசபைக்கு உட்பட்ட பகுதியில் அமைந்துள்ள குறித்த வீதியைத் தினமும் பல நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வரும் நிலையில் இவ்வாறு வீசப்பட்டிருந்த போத்தல் துகள்களால் அப்பகுதியால் இன்றையதினம் போக்குவரத்துச் செய்த பொதுமக்கள் பெரும் அசெளகரியங்களை எதிர்கொண்டனர்.

இதேவேளை, நேற்று இரவு-9 மணி வரை அப்பகுதியில் முச்சக்கரவண்டிச் சாரதிகள் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில் அதன் பின்னரே குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.

(செய்தித் தொகுப்பு மற்றும் படங்கள்:- செ.ரவிசாந்)

RELATED ARTICLES

Most Popular