யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணனின் தூய அழகிய மாநகரம் எனும் துரித அபிவிருத்தி செயற்திட்டத்தின் ஒரு கட்டமாக வடிவமைக்கப்பட்ட யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள நகரக் குளத்தின் புனரமைப்புப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று புதன்கிழமை(07.12.2022) முற்பகல்-10.30 மணியளவில் யாழ்.மாநகர முதல்வர் விஸ்வலிங்கம் மணிவண்ணன் தலைமையில் இடம்பெற்றது.

குறித்த திட்டம் நிறைவடைந்ததும் எவ்வாறு குறித்த குளம் மிளிரப் போகிறது என்பதைக் காண்பிக்கும் அழகிய காணொளிக் காட்சியும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இத் திட்டமானது எதிர்வரும் மூன்று மாதங்களுக்குள் பூர்த்தி செய்ய எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேவேளை, 100 மில்லியன் ரூபா செலவில் இத் திட்டம் செயற்படுத்தப்படுகின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.



(செய்தித் தொகுப்பு:- செ.ரவிசாந்)