fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

சமந்தாவை அதிர்ச்சியாக பார்த்த நாக சைதன்யா

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தில் நடிகர் விஜய் சேதுபதி மற்றும் நடிகை சமந்தா நடித்து இருக்கிறார்கள். வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து இருக்கிறார் விஜய் சேதுபதி. இப்படம் வருகிற மார்ச் 29-ந் தேதி ரீலீசாக இருக்கிறது. விஜய் சேதுபதி  இப்படத்தில் திருநங்கை வேடத்தில் நடித்து  இருக்கிறார். இதில் சமந்தா, ரம்யா கிருஷ்ணன், மிஷ்கின், காயத்ரி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

சமந்தாவை அதிர்ச்சியாக பார்த்த நாக சைதன்யா

சமந்தா வில்லியாக சித்தரிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து கணவரிடம் சமந்தா, நான் சூப்பர்  டீலக்ஸ் படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் பற்றி சொன்னபோது என்னை அவர் அதிர்ச்சியாக பார்த்தார் என்று கூறியிருக்கிறார்.  ரம்யா கிருஷ்ணனும் ஒரு கதாபாத்திரத்தில் வருகிறார். விஜய் சேதுபதியின் திருநங்கை வேடம்  முன்பே வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. சமீபத்தில் தணிக்கைக் குழுவுக்கு அனுப்பப்பட்டது. இப்படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைத்துள்ளது. முன்னதாக தியாகராஜ குமாரராஜா இயக்கிய ஆரண்ய காண்டம் படத்திற்கும் ‘ஏ’ சான்றிதழே கொடுக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்த விஜய் சேதுபதி

TamilTwin India

ஊரடங்கில் நிச்சயதார்த்தத்தை சிம்பிளாக முடித்த பிரபல நடிகர்.!

TamilTwin India

ஒட்டு துணி இல்லாமல் ஆட்டம் போட்ட பூனம் பாண்டே, இதெல்லாம் அநியாயம் என ரசிகர்கள் குமுறல்!

TamilTwin India