fbpx
TamilTwin News | Tamil News, Entertainment, Articles and more
சினிமா

எனது மகன் கார் மெக்கானிக்: சௌந்தர்யா ரஜினிகாந்த்

தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் 2 ஆவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். இவரும், பிரபல தொழிலதிபருமான விசாகனுக்கும் கடந்த மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களின் திருமணத்தில் பல சர்ச்சைகள் எழுந்தது அனைவரும் அறிந்ததே.

ஏற்கனவே சௌந்தர்யாவுக்கு முதல் திருமணத்தின் மூலம் வேத் கிருஷ்ணா என்ற ஒரு மகன் இருக்கிறான். அத்திருமணத்தில் மிகக்குறிப்பாக எழுந்த சர்ச்சை திருமணத்திற்குப்பின் வேத் கிருஷ்ணா யாருடன் இருப்பார் என்பதுதான்.

எனது மகன் கார் மெக்கானிக்: சௌந்தர்யா ரஜினிகாந்த்

இந்த நிலையில், நேற்று சௌந்தர்யாவும், வேத் கிருஷ்ணாவும் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, வேத் கையில் ட்ரில்லர் மெஷின் போன்று ஒன்றை வைத்துக் கொண்டு ஏதோ பிஸியாக இருந்தார்.

அப்போது, அதனைக் கண்ட சௌந்தர்யா என்ன பண்ணுகிட்டிருக்க என்று கேட்டார். மேலும், நீ தான் இந்த காரை வடிவமைத்தாயா? என்றும் கேட்டுள்ளார். இதற்கு வேத் ஆமாம், என்று பதிலளித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சௌந்தர்யா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: எங்களது சொந்த லிட்டில் மெக்கானிக். வேத் காரை வடிவமைக்கிறான் என்று பெருமிதம் பொங்க ஒரு தாய்ப்பாசத்துடன் குறிப்பிட்டுள்ளார். திருமணத்திற்கு பின்பும் வேத் கிருஷ்ணா சௌந்தர்யாவுடன் தான் உள்ளார் மேலும் அதே பாசத்துடன் முன்பு இருந்தது போலவே உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Related posts

போன் வந்தா எடுத்து பேசுவேன்! நமக்கு இந்த டிவிட்டர் கிட்டர்லாம் தெரியாது, நடிகர் செந்தில் அதிரடி!

TamilTwin India

விஜய் சேதுபதியிடம் லட்சுமி ராமகிருஷ்ணன் கோரிக்கை

N N

தாயக மரியா மைனா நந்தினி, வைரலாகும் கர்பிணி போட்டோ ஷூட்..!

TamilTwin India